Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

முருகன் திருத்தலங்கள் »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

005. இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு
 
இரத்தினகிரி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்ட தலைநகராகிய வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் பாதையில் 10 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : ஆறுமுகப்பெருமான்

திருத்தலச் சிறப்புகள் : இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இவ்வூர்பகுதியில் ஓங்கி உயர்ந்த மிக அழகிய மலை இரத்தினகிரி ஆகும். இம்மலை மீது முருகன் கோவில் கொண்டுள்ளார்.  விசாலமான 170 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. மலை மீது ஏறிச் செல்லும் பாதையில் எழில் மிகும் மண்டபங்களைக் காணலாம். இக்கோவிலில் மிகப் பிரம்மாண்டமான கோபுரமும் கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

 மூலவருக்கு முன் கருவறையில் மிகப் பெரிய வேல் ஒன்று உள்ளது. ஆடிக் கிருத்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஆறுமுகப் பெருமானார் நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி திவ்ய தரிசனம் தருகிறார்.

கோயில் அமைப்பு : மலையில் கிரிவலம் வருவதற்கான அகன்ற பாதையில் மலைமேல் ஏறுவதற்கான படி மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு முன்னதாக பெரிய முகப்பு வாயிலிலிருந்து செல்லும் பாதையில் வரசித்தி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவ்விநாயகரை வழிபட்ட பிறகே மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.

 படிமண்டபத்திலிருந்து மலைக்கோயிலைச் சென்று அடைவதற்கு 177 படிகளில் ஏறிச் செல்லுதல் வேண்டும். இடையில் இளைப்பாறுவதற்கான இரண்டு மண்டபங்கள் உள்ளன. மேலே ஏறிச் செல்லும் போது ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தைக் கண்டு மகிழலாம். இம்மலைக் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் கற்பக விநாயகரை கண்டு வழிபடலாம். ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் கருவறைக்கு தென்பாகத்தில் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது கருவறையுள் பாலமுருகப்பெருமான் திருக்கரத்தில் வேல் தாங்கி வள்ளி தெய்வயானை சமேதராகக் காட்சியளிக்கின்றார். இம்மூலவருக்கு முன் கருவறையில் ஒரு பெரிய வேல் ஒன்றும் காட்சியளிக்கின்றது.
 
 இம்மலையில் ஏறுவதற்கு படிக்கட்டு பாதை அமைந்துள்ளமை போன்றே அதனை ஒட்டினாற் போன்று இறங்கும் படிக்கட்டு பாதையும் இடையில் மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆடி மாதம் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடிக் கிருத்திகை இங்கு மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது.

இங்கு முருகனால் ஆட்கொள்ளப்பட்ட பாலமுருகனடிமை என்பவரால் இத்தலம் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டு மிகப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இவர் மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்திய செய்ய வழியையும் கூறுகிறார். 

 தற்போது மலைக்கு காரில் செல்லும் அளவிற்கு சாலையும் தீர்த்தக்குளமும் அமைக்கப்பட்டு வருகிறது.

விமானதளம் : சென்னை

ரயில் நிலையம் : காட்பாடி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1