Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
Karma
Top » Temples »
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
ஜோதிர் லிங்கங்கள் - 12 »
 
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

12. கேதாரம்
 

திருக்கேதாரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உத்ராஞ்சல் மாநிலத்தில  உள்ளது. ஹரித்துவார் - ரிஷிகேசம் வடியாக 240 கி.மீ தொலைவில் உள்ளது. இமயமலைச் சாரலில் நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. போகவர வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. வழிநெடுக ஊர்களும் உள்ளன. இமயமலையில் சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம்.

சுவாமி : கேதாரநாதர்

அம்பிகை : கேதாரகௌரி

தீர்த்தம் : கவுரிகுண்ட்

திருத்தலச் சிறப்புகள்: பிருங்கி முனிவர் பொருட்டுப் பார்வதியம்மையார் பரமசிவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற திருவுர். உறைபனியால் மூடப்பட்ட திருக்கோவில் மேமாதம் திறக்கப்படும். அக்டோபர் மாதம் மூடப்படுகிறது. உறைபனியை உளி சுத்தியல் கொண்டு செதுக்கியப்பின்தான் திறக்க முடியும். இம்முறையால் ஆறு மாதங்கள் மண்ணவரும் ஆறு மாதங்கள் விண்ணவரும் தனித்தனி வழிபடுவதாக எண்ணப்படுகிறது.


பரிவார மூர்த்திகள் : பைரவர் பிள்ளையார் நந்தி பாண்டவர்கள் கண்ணன் ஆதிசங்கரர் மாரதி ஈசானீசுவரர் விஷ்ணு கார்த்திகேயர் அர்த்தநாரீசுவரர்.

தல தீர்த்தங்கள் : உதககுண்ட தீர்த்தம் கெளரி குண்டம் மந்தாகினி தீர்த்தம்.

பெயர்காரணம் : ஆகாயத்திலிருந்து வேகமாக புமியை நோக்கி வரும் கங்கையைச சிவபெருமான் தம் சடாமுடியில் தாங்கி புமியில் விட்ட சம்பவத்தைக் குறிக்கும் இடம் கேதார நாதம் எனப் பெயர் பெற்றது.
 

முக்கிய இடங்களிலிருந்து உள்ள தூரம் : இமயமலையில் உள்ள கேதார் நாதத்திற்கு வாயிற்படிபோல அமைந்த ஹரித்வார் ரிஷிகேசம் வழியாகச் செல்ல வேண்டும். ஹரித்துவாரிலிருந்து கேதார் நாம் மலைமேல் 260 கி.மீ. ரிஷிகேசிலிருந்து கேதார் நாதம் 230 கி.மீ தூரம் உள்ளது.

யாத்திரைக்கு ஏற்ற காலம் : கேதார் நாதம் யாத்திரை செல்லக் கூடியவர்கள் காலநிலையை அவசியம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற தலங்களுக்குச் செல்லும் போது சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கேதார் நாத் தலயாததிரையின் போது காலநிலையை அனுசரித்தே ஆக வேண்டும். ஏனென்றால் பனிபடர்ந்த மலையில் பாதை செல்லுகிறது. ஆறுமாதம் பனி பாதை உறைந்து போக்குவரத்திற்கு ஏற்றதாக இருக்காது. கோடைகாலமான மே ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களே கேதார்நாத் போக ஏற்ற காலம் ஆகும். ஆறுமாதம் வேர்கள் புஜிப்பார்கள் ஆறுமாதம் மனிதர்கள் புஜிப்பார்கள் என அதற்குத் தான் பக்தி புர்வமாகவே கூறப்படுகிறது. சிலசமயம் மேலே சென்றவர்கள் திரும்பி வரமுடியாத அளவு பனிப்பாறைகள் சரிந்து விழுந்து பாதைகளை மூடி விடலாம். இந்த ஆண்டு சீசன் காலகட்டத்தில் மேலே சென்றவர்கள் ஒரு வாரம் இருவாரம் வரை திரும்பி வரமுடியாமல் பாறை சரிந்து விட்டதாம். ரிஷிகேசு ஹரித்துவார் டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலாத்துறையினருடன் தொடர்பு கொண்டு காலநேரம் விரங்களை அறிந்து யாத்திரைக்குச் செல்லல் நலம் பயக்கும்.
 
திருத்தலச்சிறப்பம்சங்கள் : கேதார்நாத் நம் நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்று. இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும் இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும் போது மக்கள் அடையம் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
 இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி வழிபட்டது மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
 இத்தலத்தில் சிவலிங்கம் மற்நெற்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.
 ஆறுமாதகாலம் தேவர்கள் வழிபடுவார்களாம். மற்ற ஆறு மாதம் மனிதர்கள் வழிபடக் கோயில் நடைதிறந்திருக்குமாம். திருமால் நாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தாராம். இது அத்தகைய புனித்த்தலம். கேதார்நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்க செய்துள்ளனர். அவரது கோயிலும் இங்கே உள்ளது.
கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும் புனிதத்தீர்த்தங்களும் உளள்ன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள். பக்தர்களுக்காகவே உண்டாகியது போல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும்.
 இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும் சில காலம் வாழ்ந்ததாகவும் இக்கோயிலின் பின்பக்கம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றார்கள். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றதும் இத்தலமே என்றும் கூறுகின்றனர்.
ஆதிசங்கரரும் இவ்வழியெ தான் சுவர்க்கம் சென்றாராம். அவர் தாபித்த சக்தி பீடம் இங்கெ உள்ளது என்கின்றனர்.
பீமன் தன் கதையுடன் மாட்டு மந்தையை காவல் காத்து நிற்பதை கண்ட சிவபெருமான் சிவபெருமான் எருமை உரவம் எடுத்து புமியில் மறையும் போது அதன் பின்பாகத்தை மட்டும் பீமன் பிடித்தமையினால் எருமையின் பின்பக்கம் போன்ற லிங்கமே இங்கெ வழிபடப்படுகின்றது.
 இராவணன் தவம் செய்து கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.
 இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும் வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும் அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

தலபுராணம் : மகாபாரத காலத்தே பாண்டு மகாராஜாவும் குந்திதேவியும் அரசு துறந்து இப்பகுதியில் தவ வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் மாத்ரியும் வாழ்நது வந்தாள். குந்திக்கு தர்மர் பீமன் அர்ச்சுனன் மூவரும் நகுலன் சகாதேவன் ஆகிய இருவர் மாத்ரிக்கும் பிறந்தனர். பாண்டு மன்னன் சுவர்க்கம் சென்ற பின்பு இரண்டு ராணிகளும் பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு அஸ்தினாபுரம் அரண்மனைக்குச் சென்றனர். எனவே பாண்டவர்கள் பிறந்த இடம் இதுவே ஆகும்.
 அஸ்தினாபுரத்தில் துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர்கள் நாடு நகரம் அரசு இழந்து 13 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டியது ஆகிவிட்டது. அப்படிப் பாண்டவர்கள் வனவாசம் சென்ற காலத்தே வரும் போரில் துரியோதனனை வெல்லப் பாசுபதாஸ்திரம் தேவைப்பட்டது. அர்ச்சுனன் இங்கே வந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். பல நாட்கள் ஆகிவிட்டதால் அர்ச்சுனனைத் தேடி மற்றவர்களும் இங்கே வந்துவிட்டனர்.
 பின்பு குருக்ஷேத்திரப் போர் ஏற்ப்பட்டது. அதில் பாட்டன் பீஷ்மர் மற்றும் உறவினர்கள் பலரையும் பாண்டவர்கள் கொல்ல நேர்ந்தது. பொறாமையும் மண்ணாசையும் காரணமாக சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அதில் சம்பந்தமே இல்லாத ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டனர். அதனால் பெரும் தோஷம் ஏற்படவே அந்த தோஷத்தைப் போக்க கண்ணபெருமான் ஆலோசனைப்படி பாண்டவர்கள் சிவபெருமானை வழிபடக் காசிக்குச் சென்றனர்.
 காசியில் கங்கையில் நீராடிச் சிவபெருமானைக் காணக் கடும் தவம் மேற்கொண்டனர்.
ஆனால் சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சி தராமல் கேதார் நாதம் சென்று விட்டார். காசியில் சிவபெருமான் இல்லாமையினால் பாண்டவர்களும் கேதார் நாதம் வந்து சிவபெருமானைத் தேடினார்கள்
கேதார் நகரத்தில் சிவலிங்கம் அமைத்து சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டனர் காசியிலிருந்த கண்ணபிரான் ஆலோசனைப்டி தம்மைத் தேடிப்பின் தொடர்ந்த பாண்டவர்களுக்குக் காட்சி தராமல் சிவபெருமான் ஓர் எருமை வடிவம் மேற்கொண்டு மாட்டு மந்தைகளுடன் கலந்து புல் மேய ஆரம்பித்தர். பாண்டவர்களால் சிவபெருமானைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை நேரம் வந்தது. பசுக்கூட்டம் எப்படியும் வீடு திரும்பித்தானே ஆக வேண்டும்
 பீமன் கோதாரத்தில் பசுக்கள் மேய்ந்த பகுதியில் இரண்டு மலையிகளின் மீது இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு தம் கதையினால் பசுக்களை விரட்டித் தனது இருக்கால்களுக்கிடையில் போகும்படி செய்தார். சிவபெருமானைக் கண்டுபிடிக்கவே பீமன் இவ்வாறு செய்தார். பீமன் காலடியில் எல்லாப் பசுக்கூட்டங்களும் சென்று விட்டன. ஆனால் பீமன் கதையால் விரட்டப்பட்ட சிவபெருமான் பீமனுக்குப் பயந்தது போல் பூமியில் நுழைய ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட பீமன் ஓடிப்போய் சிவபெருமானைப் பிடிக்க முயன்றார். ஆனால் சிவபெருமானின் பின் பகுதிதான் பீமனால் பிடிக்க முடிந்தது. அந்தச் சிவபெருமான் பின் பகுதியெ சிவலிங்கமாக வைத்துக் கோயில் கட்டிப் பாண்டவர்கள் வழிபட்டனர். அங்கேயே அன்ன ஆகாரம் இன்றி கடும் தவம் மேற்கொண்டனர்.
பாண்டவர்கள் வழிபாட்டிற்கும் கடுமையான தவத்திற்கும் மனம் மகிழ்ந்து சிவன் நேரில் வந்து அவர்களுக்கு காட்சி தந்தார். பாண்டவர்கள் சிவபெருமானை வணங்கி பாரதப் போரில் கொலை செய்த பாவம் போக வரம் அருள வேண்டினர். சிவபெருமானும் மனம் மகிழ்ந்து அவர்களுக்குக் கங்கா தீர்த்ம் வழங்கி அதில் அவர்களை நீராட வைத்துப் பாண்டவர்கள் வேண்டுதல்படி அவர்கள் வணங்கிய லிங்கத்தில் சிவபெருமான் ஜோதியாக ஐக்கியமாகி எழுந்தருளியுள்ளார். சிவபிரான் பிண்டமே கேதார்நாத்தில் இன்றும் வழிபடப்படுகின்றது. எனவேதான் கேதார் நாதர் சுயம்புவாக ஒரு முக்கோணப் பாறையாகத் தோற்றம் அளிக்கின்றார். வேறெங்கும் காணாத லிங்கமாக நாம் இங்கே சிவபெருமானை புதிய வேறுபட்ட லிங்கமாக வழிபடுகின்றோம். மூலத்தானத்தில் பாண்டவர்கள் விக்ரகங்களும் உள்ளன.

கோயில் அமைப்பு : இக்கோயில் பாண்டவர்கள் கட்டியது. ஆதிசங்கரர் புனர் நிர்மாணம் செய்துள்ளார். கோயிலின் மூலக்கோபுரம் நான்கு புறமும் தட்டையான கூம்பு வடிவத்தில் அதிக உயரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது கலசம் இருக்குமிடம் சதுரமாகக் கட்டப்பட்டு கலசமும் கொடியும் காணப்படுகின்றன. கர்ப்பக் கிருகத்தை ஒட்டி அர்த்த மண்டபம் சிறியதாகவும் கூறைத்தகடுவேய்ந்ததாகவும் உள்ளது. கோயிலிருப்பிடம் சுமார் 15000 அடி உயரத்தில் இமயமலையில் பனிப் பிரதேசத்திலுள்ளது.
 கோயிலில் ஒரு முக்கோண வடிவப் பாறையே சிவலிங்கம் ஆகும். சிவபெருமானும் கோயில் முகப்பும் நம் நாட்டை நோக்கிச் தெற்குமுகமாக அமைந்துள்ளது. சதாசிவமூர்த்தி நம் மக்களை சதாபார்த்து ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கின்றார். கோயிலினுள் கேதார நாதர் கேதார கெளரி பாண்டவர்களும் திரௌபதியும் மகாவிஷ்ணு விநாயகர் சுப்பிரமணியர் நந்தி ஆகியோர் மூர்த்தங்கள் உள்ளன. அர்த்த நாரீசுவரர் சிலையும் உள்ளது. இங்கே மக்கள் கேதாரநாதரைத்தம் உடலில் எண்ணெய் தடவிக் கொண்டு தொட்டுத் தழுவி வழிபடும் பழக்கம் உள்ளது.
 இக்கோயிலின் பின்பக்கம் ஒருவழியுள்ளது. அது சொர்க்கம் போகும் பாதையாம். அதன் வழியே 35 கி.மீ சென்றால் பத்ரிநாதர் ஆலயம் போகலாம் என்றனர். மேலே சென்றால் இயற்கை அன்னைக் கோயில் உள்ளதாம். அதில் சிவபெருமான் எருமை மீது அமர்ந்துள்ளார் என்கின்றனர். மேலும் ஹரிஹரர் கோயிலும் கோபேசுவரர் கோயிலும் அடர்ந்த காட்டுப் பக்கம் உள்ளனவாம்.
 கேதார நாதர் கோயிலின் சுவர்களில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் ஏப்ரல் கடைசியில் திறந்து அக்டோபரில் தீபாவளிப் பண்டிகை முடிந்ததும் நடை அடைத்துவிடுவார்கள். சிவபெருமானுக்குப் புஜை செய்யும் பண்டாக்கள் குப்தகாசி உக்கிமத் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். கோயில் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

தரிசனத்தால் உண்டாகும் பலன் : கேதார நாதத்தில் சிவபெருமான் வசிப்பதால் நாம் சிவபெருமானையே தரிசித்த பலன்களைப் பெறுவோம். வெந்நீர் குண்டத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் நம் பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும். பாவம் செய்தவர்கள் புண்ணியர்களாகவும் புண்ணியர்கள் மேலும் புண்ணியர்களாகவும் சிவ தரிசனத்தால் ஆவார்கள். தேவப்பிரயாகை கூடுதுறையில் சிராத்தம் முதலியன கங்கையில் செய்யப்படுவதால் நம் முன்னோர்களும் பாவம் நீங்கி சொர்க்கம் புகுவார்கள். வித்தைகள் நன்கு கற்க முடியும். அகத்தியருக்கு சிவபெருமான் தவித்தை கற்றுக் கொடுத்த இடம் இங்கே உள்ளது. கெளரி குண்டம் தீர்த்தத்தில் நீராடி சிவபிரானையும் கெளரி மாதாவையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குப்தகாசியிலிருந்து 4.5 கி.மீ தூரமுள்ள காளிமடம் என்னும் இடத்தில் லட்சுமி சரஸ்வதி துர்க்கையுள்ளனர். அவர்கள் வழிபட்டால் எல்லா நலன்களும் கிட்டும்.
 கோதார் நாதர் கோயிலில் உள்ள விஷ்ணுமூர்த்தியைத் தரிசித்தால் பத்ரிநாதத்தில் நாராயணனைத் தரிசித்த பலன் கிடைக்குமாம். முக்தி மோட்சம் சொர்க்கம் கிட்டும் என்கின்றனர். கருட கங்கை குளத்தில் நீராடி அதில் கிடைக்

Tell a Friend
Print Frindly View

 

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1