Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
Karma
Top » Temples »
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
ஜோதிர் லிங்கங்கள் - 12 »
 
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

04. குங்குமணேசுரம்
 

4. கும்குமணேசுவரம்

திருத்தல இருப்பிடம்: குங்குமணேச்சுவரம் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்று. எனவே குங்குமணேசுவரம் மகாராட்டிர மாநில்த்தில் உள்ள தலமாகும். மகாராட்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது. குங்குமணேசுவரம் சிற்பக்கலையில் உலகப் புகழ் பெற்ற எல்லோராவிற்குச் சமீபம் எல்லோரா குகைக் கோயில்களுக்குப் போகும் முன்பாக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எல்லோரா செல்லக்கூடியவர்கள் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மாவட்டத்தின் தலைநகரமும் புகழ் பெற்றதுமான பெரிய நகரம் அவுரங்காபாத்திற்கும் வடமேற்கே 23 கி.மீ தொலைவில் உள்ளது.


சுவாமி : குங்குமணேசுவரர்

அம்பிகை : குங்குமணேசுவரி

தலப்பரிவார மூர்த்திகள் : விநாயகர் முருகர் பைரவர் அனுமன் ஆமை வடிவம்.

தலத்தின் தீர்த்தங்கள் : சிவாலய தீர்த்தம் எலா ஆற்றின் தீர்த்தம்

பெயர் காரணம் : இத்தலத்தில் பார்வதி தேவியார் சிவபெருமானைக் குங்குமப்புவால் அர்ச்சனை செய்து வழிபட்டுப் பேறு பெற்றாராம். அதனால் இத்தலம் குங்குமணேசுவரம் என்று பெயர் ஏற்பட்டது என்பர். மற்றும் குங்குமப்புவிற்கு மராட்டிய மொழியல் கிருஷ்ணா என்பது பொருள். அதனால் கிருஷ்ணேசுவரம் எனவும் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். பார்வதிதேவியார் தாம் நெற்றிக்கு இடும் குங்குமத்தை எடுத்து தமது இடது கையில் வைத்து வலது கை ஆள் காட்டி விரலால் சிறிது தேய்த்தாராம். அப்போது ஒரு ஜோதியானது தோன்றி அவர் வழிபட்டு வந்த குங்குமேசுவரர் லிங்கத்தில் செனற தங்கியதாம். சிவலிங்கம் சிவப்பாக மாறி விட்டதாம். சிவலிங்கம் அர்ச்சித்து வழிபட்டதாலும் இறைவனுக்கு குங்குமனேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.
 இத்தலத்தில் சிவலிங்கம் சிவப்பாக இருப்பதாலும் கோயில் சிவப்புக் கறகளால் கட்டப்பட்டு இருப்பதாலும் சிவபெருமானுக்குக் கிருஷ்ணேசுவரர் என்றும் கோயிலுக்குக் கிருஷ்ணேசுவரம் என்றும் பெயர் ஏற்பட்டதாம். அதனால் இத்தலத்திற்கும் கிருஷ்ணேசுவரம் எனவும் பெயர் வழங்கப்படுகிறதாம்.
 இத்தலத்தில் ஆதிகாலத்தே கிருஷ்ணை என்ற சிவபக்தை தவம் செய்து சிவபெருமானை இங்கே ஜோதிர் லிங்கமாக இருக்க வரம் வேண்டினாளாம். அதன்படி சிவபெருமான் இங்கே ஜோதிர் லிங்கமாக விளங்குவதால் அவருக்கு அந்தப் பக்தையின் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

தலச்சிறப்பு : குங்குமணேசுவரம மகாராட்டிராவில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. சிவலிங்கமும் கோயிலும் சிவப்பாகக் காணப்படுகிறது. சிற்பக் கலை நுணுக்கம் வாய்ந்த கோயில் பார்வதி தேவியால் ஜோதிர்லிங்கம் ஆக்கப்பட்ட தலம் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டுச் சென்றால் மறுபிறவி என்பதே கிடையாதாம். சிவாலாயத் தீர்த்தத்தில் நீராடியவர்கள் சுவர்க்கம் புகுவார்களாம். மகா சிவராத்திரி அன்று இத்தீர்த்தமாடி ஈசனை வழிபட்டவர் மோட்சம் அடைவார்களாம்.
 உலகப்புகழ் பெற்ற எல்லோரக் குகைக்கோயில் ஒரு கிலோ மீட்டருக்கு அருகே உள்ளதால் எல்லோரா தரிசிக்க வரக்கூடியவர்கள் இங்கே வந்து சாமி தரிசனம் செய்து விட்டுப் போகிறார்கள்

யாத்திரை செல்ல ஏற்ற காலம் : குங்குமணேச்சுவரம் சமவெளி பிரதேசத்தில் உள்ள தலம். கடற்கரை ஏதுமற்ற மத்தியப் பகுதியில் உள்ள தலம். போவதற்க எந்தவிதத் தடங்கலும் அற்ற தலம். எனவே பக்தர்கள் சவுகரியத்தை ஒட்டியும் தலத்தில் அதிகமழை வெப்பகாலம் தவிர்த்தும் ஆண்டு முழுதும் எப்போது வேண்டுமானாலும் யாத்திரை மேற்கொள்ளலாம்.

திருத்தலப்புராணம் :

ஜோதிர்லிங்கம் தோன்றிய வரலாறு : பார்வதி தேவியானவர் சிவபெருமானை நோக்கி இங்கு ஒரு சமயம் தவம் செய்து கொண்டிருந்தார்.
 அம்பிகை இங்குள்ள ஏலா என்னும் நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டு வந்தார். பார்வதி தேவியார் குங்குமம் கொண்டு சிவலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். சிவலிங்கம் குங்குமம் போன்று சிவந்து காணப்பட்டது. குங்குமேசுவரர் எனப் பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு ஜோதிலிங்கம் தாபிக்க சிவனும் பார்வதியும் திருவுளம் கொண்டனர்.
 ஒரு நாள் பார்வதி தேவியார் ஏலாநதியில் நீராடி மாற்றாடை அணிந்து சிவபுசையில் அமர்ந்தார். பார்வதி தேவியார் தமது இடது உள்ளங்கையில் சிறிது குங்குமத்தை வைத்து வலது கை ஆள் காட்டி விரலால் ஓம் நம சிவாய எனக் கூறித் தேய்த்தார். அப்போது அவரது கையில் மிகவும் பிரகாசமான ஜோதி ஒன்று தோன்றியது. அப்போது ஈசனும் பார்வதி தேவி வழிபட ஒரு ஜோதிர்லிங்கம் படைப்பதற்காக இநத ஜோதி தோன்றியது என ஆசரீரியாகக் கூறினார்.
 பார்வதி தேவியின் கையினின்றும் தோன்றிய ஜோதியானது பார்வதி தேவி வழிபட்ட சிவலிங்கத்தில் ஐக்கியமாகியது. அப்போது சிவலிங்கம் மிகவும் பிரகாசமான ஜோதிர்லிங்கமாகப் பிரகாசித்தது. மேலும் குங்கும் போன்று சிவப்பாகவும் ஜொலித்தது. பார்வதி தேவியும் மிகுந்த பக்தியுடன் வணங்க சிவபெருமான் நேரில் வந்து பார்வதி தேவியைத் திருமணம் செய்து கயிலைக்கு கூட்டிச் சென்றார். இவ்விதமாக இங்கு ஜோதிர் லிங்கம் தோன்றியது. மக்களும் பக்தியுடன் இன்றும் வழபட்டு வருகின்றனர்.

ஏலாநதி உண்டகிய வரலாறு : பிரம்மதேவர் பிரபஞ்சத்தைப் படைப்பதால் அவருக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். விஷ்ணு பிரபஞ்சத்தைக் காத்தருள உலகத்து ஜீவராசிகளின் விருப்பத்தை லட்சுமி தேவியின் பணபலத்தினால் புர்த்தி செய்து வருகிறார். எனவே இவர்கள் இருவருக்கும் வேலை அதிகம்.
 அப்படியிருந்தும் சில சமயங்களில் திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டு ஓய்வெடுப்பார். ஆனால் சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். ஆக்கலை விட அழித்தலே மிகச் சுலம் ஆகும்.
 ஓய்வுக்கு நேரமும் அதிகம் கிடைக்கும் எனவேதான் சதா சிவனே எனத்தியானம் செய்வார். அதனால் சதாசிவன் எனப் பெயர் கூடப்பெற்றுள்ளார். இல்லாவிட்டால் பார்வதி தேவியுடன் சண்டை புடுவார் அல்லது திருவிளையாடல் புரிவார். சில சமயங்களில் பார்வதி தேவியுடன் உலக நன்மைக்காகக் காமலீலைகள் புரிவார்.
 அந்த வகையில் ஒரு சமயம் சிவனும் பார்வதி தேவியும் இந்தக்காட்டுப் பகுதியில் மேலாடை கூட இல்லாமல் காமலீலைகளில் ஈடுபட்டிருந்தனராம். ஓர் ஆண் காக்கை திடீரென அங்கே வர பார்வதி தேவியார் வெட்கம் அடைந்தாராம். உடனே சிவபெருமான் அந்தக்காட்டுப் பகுதியில் ஆண் யாராவது வந்திருக்கக்கூடுமென தேடி ஆண்காக்கையை வெகுதூரம் விரட்டி விட்டாராம். பின்பு அக்காட்டுப் பகுதியில் எந்த ஆண் வந்தாலும் பெண்ணாக மாறிவிடச் சாபமிட்டு விட்டார். எனவே பார்வதி தேவி நிம்மதியடைந்து மறுபடியும் காமலீலைகளில் ஈடுபட்டனராம்.
 இப்படியிருக்கையில் ஒரு சமயம் சூரியனின் மகன் சுரதா தேவன் என்பவன் தமக்கு ஒரு மகன் வேண்டுமென யாகம் செய்தான். யாகத்தின்போது யாகத்தை முன்னின்று நடத்தும் முனிவருக்கு சுரதன் சிறு தவறு செய்துவிட்டான். அதனால் யாகத்தின் பயனால் மகன் பிறப்பதற்கு பதில் மகள் பிறந்தாள். அந்தப்பெயர்தான் ஏலா என்பது.
 சுரத தேவன் பிரம்மாவையும் விஷ்ணுவையும் மிகவும் வேண்டிக் கொண்டதன் பயனாக ஏலா என்ற பெண் ஆணாக மாறிவிட்டாள். சுதன்வா எனப்பெயரிட்டு சுரதன் வளர்த்து வந்தார். சுதன்வா பெரியவனாகி வேட்டையாடிக் கொண்டு சிவபெருமான் பெண்ணாக மாறிவிடச் சாபமிட்ட காட்டுப் பகுதிக்கு வர நேர்ந்தது. உடனே அவன் பெண்ணாக மாறி விட்டான். அந்தப் பெண் நாரதர் ஆலோசனைப்படி சிவபெருமானை வேண்டி இநத இடத்தில் சிவந்த மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்டுக் கடும் தவம் இயற்றினாள். சிவபெருமானும் அவள் தவத்திற்கு மகிழ்ந்து அவள் முன்பு தோன்றினார். அப்பெண் ஏலா என்னும் நதியாக மாறிட வரம் தந்தார். அக்காட்டுப்பகுதியில் இருந்த சாபத்தையும் விலக்கிக் கொண்டார். ஆனால் காக்கை மட்டும் அக்காட்டுப்பகுதியில் பறக்க கூடாது என விதித்துவிட்டார். எனவே இப்பகுதியில் இன்றும் கூட காக்கைகள் இல்லை. பின்பு ஏலாவின் வுண்டுகோளின்படி சிவபெருமான் அந்த ஆற்றங்கரையிலேயே குசுமேசுவரராக எழுந்தருளி பக்தர்களுக்கு இன்றும் அருள் வழங்கி கொண்டு இருக்கிறார். இவ்வரலாறே ஏலா நதியும் அதன் கரையில் அமைந்துள்ள குசுமேசுவரர் தோன்றிய காரணமாகும்.

சிவாலயதீர்த்தம் தோன்றிய வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஏலா என்ற அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசன் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடச் சென்று பல மிருகங்களைக் கொன்று விட்டான். அவன் வேட்டையாடிய காட்டுப்பகுதி கௌதம முனிவர் வாழும் பகுதியாகும். இதனை அறிந்த கௌதம முனிவர் அரசன் மீது கோபம் கொண்டு அவன் உடலில் புழு உண்டாகும் படி சபித்துவிட்டார். மன்னன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க கௌதமரும் மனமிரங்கி பகலில் மட்டும் சாபம் பலிக்கட்டும் இரவில் சாபத்தினின்றும் விடுதலை என வரம் கொடுத்தார். மற்றொரு சமயம் மீண்டும் அம்மன்னன் வேட்டையாடக் காட்டிற்கு சென்றான். இச்சமயம் ஒரு சிறு பிராணி கூடக் கிடைக்கவில்லை. மேலும் தாகத்தால் தவித்து நீரைத் தேடி அலைந்தான். ஓர் இடத்தில் நீர்வற்றிய ஏரியைக் கண்டான் வேகமாக ஓடோடியும் சென்று பார்க்க அந்த ஏரியின் நடுவில் ஒருகையளவு நீர் இருந்தது. மன்னன் தன்முகத்தை மட்டும் அந்நீரில் கழுவிக் கொண்டு அரண்மனைக்கு சென்று விட்டான். மறுநாள் காலையில் அந்த ஏரியின் நீர் பட்ட இடமான முகம் மட்டும் புழுவாக மாறாமல் பிரகாசமாக விளங்கியது. மன்னன் அந்த ஏரியின் மகிமையை அறிந்து அந்த ஏரி இருக்குமிடத்திற்கு ஓடினான். ஆனால் ஏரி வரண்டு கிடந்தது. வேதனை அடைந்த மன்னன் அவ்விடத்திலேயே சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தான். மன்னன் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவன் முன் தோன்றினார். மன்னன் தன் குறையை அவரிடம் கூறி தன் குறை நீங்க வரம் கேட்டான். சிவபெருமாமன் எட்டுப் புண்ணிய தீர்த்தங்களை வரவழைத்து அந்த ஏரியில் நிரப்பினார். மன்னன் இறைவன் ஆசிபெற்று அந்த ஏரியில் நீராடினான். என்ன அதிசயம் புழுக்களாக இருந்த அவன் உடல் சாபம் முதலானவை நீங்கப் பெற்றது. இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் நோய் சாபம் முதலானவை நீங்கி சொர்க்கம் அடைவர் என சிவபெருமான் வரம் தந்து சென்றார். அந்த ஏரியே இந்தச் சிவாலயத் தீர்த்தம்.
 மற்றொரு சமயம் சிவபெருமானும் பார்வதி தேவியம் இங்கு வந்தனர. பார்வதி தேவிக்கு தாகம் ஏற்படவே வறண்டிருந்த இந்த ஏரியில் தமது சூலத்தால் குத்தி நீர்வரச் செய்து தாகம் தீர்த்தார். பின்னர் சிவபெருமானும் பார்வதி தேவியும் இந்த ஏரியை ஆசீர்வதித்து இதில் நீராடியவர்கள் சுவர்க்கம் அடைய வரம் அருளிச் சென்றார்.

 அம்மையும் அப்பனும் ஏரிக்கு வரம் தந்தமையினால் ஏரி மிகுந்த சக்தியை பெற்றது. பலமக்கள் வந்து இந்த ஏரியில் நீராடினர். அவர்கள் இறந்ததும் நரகம் செல்லாமல் சொர்க்கம் காலியாகக் கிடந்தது. மேலும் பாவம் செய்தவர்கள் கூட மோட்சம் அடைந்தனர். உலகில் பாவம் செய்துவிட்டு ஏரியில் மூழ்கிச் சொர்க்கம் பெற்றனர். பாவம் அதிகரித்தது. எமதர்மராஜா கயிலை சென்று அம்மை அப்பரிடம் அனுமதி பெற்று ஏரியின் சக்தியையும் அளவையும் குறைத்தார். ஏரி தற்போதுள்ள அளவிற்கு சிறியதாக ஆகிவிட்டது.
 கி.பீ 1769ல் இந்தோர் மகாராணியார் அகல்யாபாய் என்பவர் அந்தச் சிறிய ஏரியைச் சிறிய குளமாகத் திருத்தி அமைத்து சிகப்புக்கற்கள் கொண்டு படிக்கட்டும் எட்டு கோபுரங்களும் நான்கு பக்கங்களிலும் விழிகள் எனக் கட்டி எவரும் எளிதில் குளத்தில் இறங்க முடியாத அளவு பாதுகாவல் செய்தார். இத்தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு தினசரி அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது. மகாசிவ ராத்திரியன்று மட்டும் மக்கள் மாசுபடுத்துவது போல் செய்யாமல் இத்தீர்த்தம் நம் நாட்டில் உள்ள தீர்த்தங்களையும் பாதுகாத்து மக்கள் தலையில் தெளித்து பயன்பெற மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

தரிசனத்தால் கிடைக்கும் பலன்கள் : பக்தர்கள் குறைகள் நிவர்த்தியாகும். வேண்டியவைகள் வேண்டியபடி கிடைக்கும். சிவாலயத் தீர்த்தத்தில் நீராடினால் பாபம் போய் சொர்க்கம் கிடைக்கும். ஜோதிர்லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.
 
 இத்தலத்தில் தங்குமிட வசதி இல்லை. சுற்றுப்பக்ம் வீடுகள் காணப்படவில்லை. எல்லோராவில் தங்க வசதி உண்டு அவுரங்காபத்தில் தங்கி இங்கே வந்து போகலாம். நல்ல உணவு வடுதி வசதிகள் இல்லை. சுமாரான டீக்கடைகளே காணப்படுகின்றன. நல்ல உணவிற்கும் தென்னாட்டு இட்லி சாம்பாருக்கும் அவுரங்காபாத் போக வேண்டும்.

சிவாலயதீர்த்தம் தோன்றிய வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஏலா என்ற அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசன் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடச் சென்று பல மிருகங்களைக் கொன்று விட்டான். அவன் வேட்டையாடிய காட்டுப்பகுதி கௌதம முனிவர் வாழும் பகுதியாகும். இதனை அறிந்த கௌதம முனிவர் அரசன் மீது கோபம் கொண்டு அவன் உடலில் புழு உண்டாகும் படி சபித்துவிட்டார். மன்னன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க கௌதமரும் மனமிரங்கி பகலில் மட்டும் சாபம் பலிக்கட்டும் இரவில் சாபத்தினின்றும் விடுதலை என வரம் கொடுத்தார். மற்றொரு சமயம் மீண்டும் அம்மன்னன் வேட்டையாடக் காட்டிற்கு சென்றான். இச்சமயம் ஒரு சிறு பிராணி கூடக் கிடைக்கவில்லை. மேலும் தாகத்தால் தவித்து நீரைத் தேடி அலைந்தான். ஓர் இடத்தில் நீர்வற்றிய ஏரிய&#

Tell a Friend
Print Frindly View

 

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1